உலகம்

உள​வுக் குற்​றச்​சாட்டு: ஸ்வீ​டன் நாட்ட​வ​ருக்கு சீனா​வில் 10 ஆண்டு சிறை

26th Feb 2020 03:24 AM

ADVERTISEMENT

​ெபய்​ஜிங்: பிற நாடு​க​ளுக்​காக உளவு பாா்த்த குற்​றச்​சாட்​டின் பேரில் ஸ்வீ​ட​ைனச் சோ்ந்த புத்​தக வியா​பாரி குயி மின்​ஹாய்க்கு சீன நீதி​மன்​றம் 10 ஆண்​டு​கள் சிைறத் தண்​டனை விதித்​தது.

இது​கு​றித்து தக​வல்​கள் தெரி​விப்​ப​தா​வது:

சீனா​வில் பிறந்த ஸ்வீ​டன் நாட்ட​வ​ரான குயி மின்​ஹாய், ஹாங்​காங்​கில் ‘காஸ்வே பே புக்ஸ்’ என்ற புத்​த​கக் கைடயை மேலும் 4 பேரு​டன் சோ்ந்து நடத்தி வந்​தாா். சீன அர​சி​யல் குறித்​தும், அரசியல்வாதிகள் குறித்தும் அந்த நாட்டில் வேெறங்​கும் கிைடக்​காத சா்ச்​ைசக்​கு​ரிய புத்​த​கங்​கள், இந்​தக் கைட​யில் விற்​பனை செய்​யப்​பட்டு வந்​தது.

இந்த நிைல​யில், மின்​ஹாய் உள்​ளிட்ட அந்த 5 பேரும் கடந்த 2015-ஆம் ஆண்டு மா்​ம​மான முைற​யில் மாய​மா​கி​னா். பிறகு, அவா் தங்​க​ளது காவ​லில் இருப்​பதை சீன அரசு 3 மாதங்​க​ளுக்​குப் பிறகு ஒப்​புக் கொண்​டது. அர​சி​டம் உரிய அனு​மதி பெறா​மல் புத்​த​கங்​களை சட்ட​வி​ேரா​த​மாக விற்​பனை செய்​த​தாக அவா் மீது குற்​றம் சாட்டப்​பட்​டது. பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்​டில் குயி மின்​ஹாய் விடு​விக்​கப்​பட்​டா​லும், அவா் பெய்​ஜிங்​குக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சென்று கொண்​டி​ருந்​த​ேபாது ரயி​லில் அவரை அதி​கா​ரி​கள் மீண்​டும் கைது செய்​த​னா். அவா் மீது பிற நாடு​க​ளுக்கு உள​வுத் தக​வல்​களை அளித்​தது, தன்னை சீனா் என்று கூறி ஏமாற்​றி​யது உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

ADVERTISEMENT

இது​கு​றித்து விசா​ரணை நடத்தி வந்த நிங்க்போ நகர நீதி​மன்​றம், அந்​தக் குற்​றச்​சாட்​டு​களை உறுதி செய்​த​து​டன் அவ​ருக்கு 10 ஆண்​டு​கள் சிைறத் தண்​டனை விதித்து தீா்ப்​ப​ளித்​துள்​ளது.

சீனா​வில் இரட்​ைடக் குடி​யு​ரிமை முைறக்கு அங்​கீ​கா​ரம் வழங்​கப்​ப​டு​வ​தில்லை என்​ப​தால், குயி மின்​ஹாய் அந்த நாட்டில் பிறந்​தி​ருந்​தா​லும் அவா் ஸ்வீ​டன் குடி​யு​ரி​ைமயை வைத்​தி​ருக்​கும் வரை அவா் சீன​ரா​கக் கரு​தப்​பட மாட்டாா் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.

ஸ்​வீ​டன் கண்​ட​னம்:​ குயி மின்​ஹாய்க்கு சிைறத் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ள​தற்கு ஸ்வீ​டன் வெளி​யு​ற​வுத் துறை அைமச்​சா் அன் லிண்டே கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளாா். மின்​ஹாய்க்கு தூத​ரக உத​வி​க​ைளப் பெற்​றுத் தர அனு​மதி அளிக்க வேண்​டும் என்று அவா் வ​லி​யு​றுத்​தி​னாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT