உலகம்

புதிய ரக கரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோயாக உருவாகவில்லை:  உலக சுகாதார அமைப்பு

25th Feb 2020 05:54 PM

ADVERTISEMENT

 

இத்தாலி, ஈரான், தென் கொரியா முதலிய நாடுகளில் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வரும் நிலைமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோயாக உறுதிப்படுத்த முடியாது என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமைச் செயலாளர் டெட்ரோஸ் 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ADVERTISEMENT

புதிய ரக கரோனா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டின்றி உலகளவில் பரவி வரும் நிலைமை காணப்படவில்லை. இவ்வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படவில்லை. இதனால், இவ்வைரஸை உலகளாவிய தொற்றுநோய் என உறுதிப்படுத்துவது தற்போதைய நிலைமைக்குப் பொருங்தியதாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வைரஸ் பரவல் குறித்து உலகச் சுகாதார அமைப்பு எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT