சீனாவில் 9 நாட்கள் பயணம் செய்த பின், சீன-உலக சுகாதார அமைப்பின் கொவைட்-19 நோய் கூட்டு நிபுணர் குழு 24ஆம் தேதியான(நேற்று) பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.
சீனா முன்னென்றும் கண்டிராத பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தெளிவான பயனைப் பெற்றுள்ளது. தவிர, சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. பல்வேறு நாடுகள் ஆக்கப்பூர்வ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய நேரத்தில் பயனுள்ள அனுபவத்தை சீனா வழங்கியுள்ளது என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகள் வைரஸ் பரவல் தகவல்களைக் கூட்டாக பகிர்ந்து கொள்வதை வலுப்படுத்தி, கொவைட்-19 நோயின் அறைகூவலை எதிர்கொள்வதில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று இக்குழு வேண்டுகோள் விடுத்தது.
சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இக்குழு, சீனாவின் பெய்ஜிங், குவாங்தோங், சிச்சுவான், ஹுபெய் முதலிய இடங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்