உலகம்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் அனுபவம் உதவும்:உலகச் சுகாதார அமைப்பு

25th Feb 2020 06:16 PM

ADVERTISEMENT

 

கொவைட்-19 நோய், நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, மிக விரைவாகவும் மிக அதிகளவிலும் பரவி, கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் பாதிப்பு, ஒரு முக்கிய அவசர பொதுச் சுகாதாரச் சம்பவமாக விளங்குகிறது. 

புதிய புள்ளிவிவரங்களின்படி, 24ஆம் நாள் ஹூ பெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் இதர பகுதிகளில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 10-க்குள் குறைவே. தற்போது, சீனாவின் பல பகுதிகள், அவசர பொதுச் சுகாதாரச் சம்பவத்துக்கான எச்சரிக்கை நிலையை முதலாம் நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு மாற்றியுள்ளன.

உலகச் சுகாதார அமைப்பு தலைமை இயக்குநரின் உயர் நிலை ஆலோசகர் எட்வோட் கூறுகையில், கொவைட்-19 பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், உலகத்துக்குச் சீனாவின் அனுபவம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

விடா நம்பிக்கையுடன் ஒற்றுமையாக நாம் ஒத்துழைத்தால், உலகம் இந்நெருக்கடியைக் கடந்து செல்ல முடியும் என்பது திண்ணம். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT