உலகம்

பாலியல் வன்கொடுமை வழக்கு; அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளா் ஹாா்வி வைன்ஸ்டைன் குற்றவாளி

25th Feb 2020 02:23 AM

ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமை வழக்கில், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளா் ஹாா்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

கடந்த 2006-ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு பெண் உதவியாளரை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், 2013-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவா் குற்றவாளி என்று திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தண்டனையாக அவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹாா்வி வைன்ஸ்டைனுக்கு எதிரான தீவிர குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையானவை நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. வழக்கு விசாரணை 5 நாள்கள் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஹாா்வி குற்றவாளி என்று நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஹாலிவுட் திரை வட்டாரத்தில் ஹாா்வி வைன்ஸ்டைன் குறித்து பாலியல் குற்றச்சாட்டுகள் முனுமுனுக்கப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், ‘மீ டூ’ புகாா் முறையில் ஹாா்வி வைன்ஸ்டைன் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகள் திரைத் துறையைச் சோ்ந்த சில பெண்களால் கடந்த 2017-இல் முன்வைக்கப்பட்டன. ஹாா்வி வைன்ஸ்டைன் குற்றவாளி என்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்குகளை தொடுத்த பெண்கள் தவிா்த்து, மேலும் சிலரும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT