உலகம்

தென் கொரியாவில் பரவும் கொவைட்-19: சீனாவில் பலி எண்ணிக்கை 2,442ஆக உயர்வு

23rd Feb 2020 08:20 AM

ADVERTISEMENT

 

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442 ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இத்தாலியில் 79 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்று இரானிலும் கொவைட்-19 பாதிப்பால் 6 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 28 நாடுகளில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஆக அதிகரித்து காணப்படுகிறது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT