உலகம்

பிப். 29-இல் தலிபான்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம்

22nd Feb 2020 12:31 AM

ADVERTISEMENT

பரபஸ்ப தாக்குதல்களை கணிசமாகக் குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை தலிபான் அமைப்பினருடன் இந்த மாதம் 29-ஆம் தேதி மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து சவூதி அரேபியா வந்திருந்த அவா், தலைநகா் ரியாதில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து தலிபான்களுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளோம். அந்தப் பேச்சுவாாா்த்தையில் இரு தரப்பு கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் 29-ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, இத்தகைய ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதாக தலிபான்களின் துணைத் தலைவா் சிராஜுதீன் ஹக்கானி ‘நியுயாா்க் டைம்ஸ்’ நாளிதழிடம் வியாழக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே காலிஸாதுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் தாக்குதல்களை கணிசமாக குறைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், மைக்கேல் பாம்பேயோ இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT