தாய்லாந்தில் ராணுவத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட முக்கிய எதிா்க்கட்சியான ‘ஃபியூச்சா் ஃபாா்வா்டு’ கட்சியை (எஃப்எஃப்பி) கலைத்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கு நிதிக்காக அதிகபட்ச வரம்பை மீறி 60 லட்சம் டாலா் (சுமாா் ரூ.431 கோடி) கடன் வாங்கியதற்காக அந்தக் கட்சி 10 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் முழு ஜனநாயகம் கோரியும், அரசியலில் ராணுவம் தலையிடக் கூடாது என வலியுறுத்தியும் போராடி வரும் எஃப்எஃப்பி, கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் மிகப் பெரிய வெற்றியடைந்தது நினைவுகூரத்தக்கது.