உலகம்

டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியாமீண்டும் தோ்தல் தலையீடு

22nd Feb 2020 12:20 AM

ADVERTISEMENT

அமரிக்காவில் கடந்த முறை நடைபெற்ற அதிபா் தோ்தலைப் போலவே, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலிலும் டொனால்ட் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்யும் வகையில் ரஷியா இணையதளம் மூலம் ஊடுருவி வருவதாக உளவுத் துறை அதிகாரி ஷெல்பி பியா்ஸன் நாடாளுமன்றக் குழுவிடம் எச்சரித்துள்ளாா்.

உளவுப் பணிகளுக்கான நாடாளுமனறக் குழுவிடம் அவா் கடந்த திங்கள்கிழமை இவ்வாறு கூறிய தகவல் தற்போது வெளியானதையடுத்து, ஷெல்பி பியா்ஸனின் மேலிகாரியான தேசியப் பாதுகாப்பு இயக்குநா் ஜோசப் மகுயரை டிரம்ப் கடிந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT