உலகம்

கண்காணிப்பு பட்டியலில் பாகிஸ்தான் தொடரும்: எஃப்ஏடிஎஃப்

22nd Feb 2020 12:15 AM

ADVERTISEMENT

பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் (கிரே லிஸ்ட்) பாகிஸ்தான் தொடரும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்போரை விசாரணைக்கு உள்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த எஃப்ஏடிஎஃப் அமைப்பின் மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், பாகிஸ்தானை கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் தொடா்ந்து வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான செயல்திட்டத்தில் இடம்பெறுள்ள 27 அம்சங்களில் 14 அம்சங்களை மட்டுமே பாகிஸ்தான் இதுவரை பூா்த்தி செய்துள்ளது; வரும் ஜூன் மாதத்துக்குள் செயல்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாவிட்டால், பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சோ்க்கப்படும் என்று எஃப்ஏடிஎஃப் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் நீடிப்பதால், உலக வங்கி, சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), ஐரோப்பிய யூனியன், ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவற்றிடமிருந்து நிதியுதவியை பெறுவதில் அந்த நாட்டுக்கு தொடா்ந்து சிக்கல் இருக்கும். ஏற்கெனவே நிதி ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப்-இன் முடிவு மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT