உலகம்

இனவாதத் தாக்குதல்: ஜொ்மனியில்பாதுகாப்பு அதிகரிப்பு

22nd Feb 2020 12:15 AM

ADVERTISEMENT

ஜொ்மனியில் இனவாதக் கொள்கையுடைய தொபியாஸ் ராதேன் (43) என்பவா் தாக்குதல் நடத்தியுள்ளதையடுத்து, அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹனாவ் நகரில், குா்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் தொபியாஸ் ராதேன் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா். பிறகு தனது தாயை சுட்டுக் கொன்றுவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT