உலகம்

கரோனா வைரஸ் பரவல் பற்றி உலக நிபுணர்கள் ஆய்வு

21st Feb 2020 06:50 PM

ADVERTISEMENT

 

உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 20ஆம் நாள், உலகச் சுகாதார அமைப்பு செய்தியாளர் கூட்டம் நடத்தி, புதிய ரக கரோனா வைரஸ் நிலைமை பற்றி அறிமுகம் செய்தது. இக்கூட்டத்தில், இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த நிபுணர்கள், சீனாவில் நடைமுறை பணிகளில் ஈடுப்பட்டு, சீன நிபுணர்களுடன் இணைந்து, வைரஸின் தொற்று தன்மை பற்றியும் சீனா எடுத்துள்ள நடவடிக்களின் பயன்கள் பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான 2 மருத்துவச் சிகிச்சைகளின் முதற்கட்ட சோதனை முடிவுகள், 3 வாரங்களுக்குள் பெறப்படும் என்றார்.

மேலும், சீனாவின் முயற்சியுடன், கரோனா வைரஸ் பரவல் செவ்வனே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலக நிபுணர்கள் ஆய்வு செய்ய போதுமான நேரம் உள்ளது என்றும் அவர் கூறினார். கரோனா வைரஸ் பரவலையும், அது பற்றிய வதந்திகளையும் மேலும் தடுக்குமாறு அவர் உலகப் பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT