உலகம்

கொவைட்-19: பலி எண்ணிக்கை 2,236 அதிகரிப்பு

21st Feb 2020 09:17 AM

ADVERTISEMENT

 

சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 2,236ஆக உயா்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 118 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,236ஆக வெள்ளிக்கிழமை உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 1,000க்கும் அதிகமானோரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 75,465க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று தென்கொரியாவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் உயிரிழந்தனர். இதனால் கொவைட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக தென்கொரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT