ஷாங்காய், ஷான்தோங் ஹுநான் முதலிய இடங்களில் உள்ள 80 விழுக்காட்டு முக்கிய வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தற்போது மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. மேலும் பெரும்பாலான இடங்களில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் பிப்ரவரி இறுதிக்குள் மீண்டும் இயங்க தொடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நிலைமை, சீனச் சந்தையின் மாபெரும் ஈர்ப்பு ஆற்றலைக் காட்டுகிறது.
2017ஆம் ஆண்டு முதல், சீனா தொடர்ந்து 3 ஆண்டுகளாக, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் உலகின் 2ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. இவ்வாண்டின் ஜனவரி, சீனா உண்மையாகப் பயன்படுத்திய அன்னிய முதலீட்டுத் தொகை 8757 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 4 விழுக்காடு அதிகம். கடந்த ஆண்டு முதல் சீரான வளர்ச்சிப் போக்கினை அடிப்படபையில் நிலைநிறுத்தி வருகிறது.
தற்போது வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சீன பொருளாதாரத்துக்கான பாதிப்பு, தற்காலிகமானது தான். சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு நீண்டகாலமாக மாறாது என்பது சீனாவில் உள்ள வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் பொது கருத்தாகும்.
இந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை சீன அரசு எடுத்துள்ளது. சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சமமான சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சீன மக்களின் கட்டான முயற்சியுடன், நோய் கட்டுப்பாட்டு நிலை தெளிவான சாதனைகளைப் பெற்றுள்ளது. பாதிப்பைக் குறைக்க சீனா பாடுபட்டு வருகிறது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி இலக்கை திட்டப்படி நனவாக்கும் நம்பிக்கை சீனாவுக்கு உண்டு.
சீனாவுடன் கட்டான நேரத்தில் கூட்டாக இணைந்து செயல்பட்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் வசந்த காலத்தின் மலர்களையும் சீனாவுடன் கூட்டாக வரவேற்கும்.