உலகம்

கரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளின் கட்டுமானம் பற்றிய நேரலை

6th Feb 2020 11:03 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், சீனாவின் வூஹானில் சில விளையாட்டரங்குகளும் கண்காட்சி மையங்களும், தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

சீன ஊடகக் குழுமத்தின் “யாங் ஷி பின்” என்ற புதிய ஊடகச் செயலி மூலம், இவற்றின் கட்டுமானம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி நள்ளிரவு வரை, 10 கோடிக்கும் அதிகமான இணையப் பயன்பாட்டாளர்கள் இந்நேரலையைப் பார்த்து, கட்டுமானப்போக்கு பற்றி விவாதித்தனர். இந்நிலைமை, இணையப் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களால், “கட்டுமானத்தின் மீதான இணையவழி கண்காணிப்பு”என அழைக்கப்படுகிறது.

இத்தகைய பெரிய அளவிலான தற்காலிக மருத்துவமனைகளக் கட்டியமைப்பது, சீனப் பொது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறையில் எடுக்கப்பட்ட புதிய முக்கியமான நடவடிக்கை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT