உலகம்

கரோனா வைரஸ் பரவலால் சேவை நிறுத்தம்: விமான நிறுவனங்களுக்கு சீனா கண்டனம்

6th Feb 2020 09:02 PM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்களது நகரங்களுக்கான சேவையை விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தூதரக ரீதியில் முறையிட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறிதாவது:

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

மேலும், சீனாவுக்கு எதிரான போக்குவரத்துத் தடைகளை விதிக்கக் கூடாது எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது. அதனை மீறி, பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சீன நகரங்களுக்கான விமான சேவைகளுக்குத் தடை விதித்துள்ளன. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தூதரக ரீதியில் முறையிட்டுள்ளோம் என்றாா் அவா்.

கரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் ஏா் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், சீன நகரங்களுக்கான விமான சேவையை நிறுத்திவைத்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT