உலகம்

வூஹானில் விரைவில் இயங்கத் தொடங்கும் மருத்துவமனைகள்

1st Feb 2020 06:04 PM

ADVERTISEMENT

 

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டப்பட்டு வருகின்ற ஹொஷென்ஷான் மருத்துவமனை பிப்ரவரி 3ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக சேவைக்கு வர உள்ளது.

அதே போல் கட்டப்பட்டு வரும் மற்றொரு மருத்துவமனையான லெய்ஷென்ஷான் மருத்துவமனை 6ஆம் தேதி முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கும் என்று வூஹான் மாநகராட்சித் தலைவர் சோ சியன்வாங் ஜனவரி 31ஆம் தேதி தெரிவித்தார்.

34 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய ஹொஷென்ஷான் மருத்துவமனையில் 1000 படுக்கைகள் உள்ளன. 75 ஆயிரம் பரப்பளவுடைய லெய்ஷென்ஷான் மருத்துவமனையில் 1500 படுக்கைகள் இருக்கும்.

ADVERTISEMENT

இவ்விரு மருத்துவமனைகள் போர் கள மருத்துவமனையின் வரையறைக்கு இணங்க வடிவமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவை திட்டப்படி பயன்பாட்டுக்கு வருவதை முன்னேற்றும் வகையில் தற்போது கட்டுமானப் பணியாளர்கள் முழு மூச்சுடன் வேலை செய்து வருகின்றனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT