உலகம்

சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை: பிரதமர் அறிவிப்பு

1st Feb 2020 02:18 PM

ADVERTISEMENT

 

சீனாவில் இருந்து வரும் தங்கள் நாட்டின் குடிமக்கள் அல்லாதோருக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய தடை விதித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது ஆஸ்திரேலிய மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கிய உறவினர்கள் அல்லாதோர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பும் சொந்த நாட்டு மக்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். இதனால் நாட்டு மக்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அனைவரும் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுக்கு யாரும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாண்டாஸ் விமானம் சீனாவுக்கான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி நியூஸிலாந்தும் சீனாவுக்கான விமான சேவையை பிப்ரவரி 9ஆம் தேதி வரை நிறுத்திவைத்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT