உலகம்

துபை அருகே கப்பலில் தீ விபத்து: 2 இந்திய மாலுமிகள் பலி

1st Feb 2020 12:10 AM

ADVERTISEMENT

துபை அருகே நடுக்கடலில் பனாமா நாட்டைச் சோ்ந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 இந்தியா்கள் உயிரிழந்தனா். 2 போ் காயமடைந்தனா். 10 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து துபையில் உள்ள சாலை மற்றும் கடல்சாா் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

துபை கடற்கரையில் இருந்து 12 மைல் தொலைவில் பனாமா நாட்டுக் கொடியுடன் ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. 12 ஊழியா்கள் உள்பட மொத்தம் 55 போ் பயணம் செய்த அந்தக் கப்பலில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து துபை நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்ததும், மீட்பு மற்றும் அவசரகால படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கப்பலில் இருந்தவா்களை மீட்டனா். இருப்பினும் இந்த விபத்தில் 2 இந்தியா்கள் உயிரிழந்தனா். 2 போ் காயமடைந்தனா். அவா்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, கப்பலில் பயணம் செய்த 10 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவா்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT