உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 8.30 கோடியாக உயர்வு

31st Dec 2020 08:28 AM

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.30 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,30,60,536 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 18,12,050 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,88,62,045 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,23,86,441 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,616 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,02,16,991 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது. 2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1 கோடியே 2 லட்சத்து 67 ஆயிரத்து 283க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 48ஆயிரத்து 774 பேர் உயிரிழந்து விட்டனர். 3-வது இடத்தில் உள்ள பிரசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 76 லட்சத்து 19 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளதோடு, ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 940 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT