உலகம்

பைசர் தடுப்பூசி செலுத்திய செவிலியருக்கு கரோனா

30th Dec 2020 09:25 PM

ADVERTISEMENT


அமெரிக்காவில் டிசம்பர் 18-ம் தேதி பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

45 வயதுமிக்க செவிலியர் மேத்யூ என்பவருக்கு கடந்த 18-ம் தேதி பைசர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசியின் பக்கவிளைவாக வெறும் கை வலி மட்டுமே அவருக்கு இருந்தது. ஆனால், 6 நாள்களுக்குப் பிறகு கரோனா வார்டில் பணியாற்றியபோது அவருக்கு சதை வலி மற்றும் சோர்வாகவும் உணர்ந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

இதுபற்றி தொற்று நோய் நிபுணர் கிறிஸ்டியன் ரேமர்ஸ் தெரிவிக்கையில், "இது எதிர்பார்க்காதது அல்ல. தடுப்பூசி பயனளிக்க 10 முதல் 14 நாள்கள் ஆகும் என்பது தடுப்பூசியின் பரிசோதனைகள் மூலம் எங்களுக்குத் தெரியும். முதல் முறை செலுத்தப்படுவதன் மூலம் 50 சதவிகிதம் பயனளிக்கும், இரண்டாவது முறை செலுத்தப்படுவதன் மூலம் 95 சதவிகிதம் பயனளிக்கும்" என்றார்.

Tags : Pfizer
ADVERTISEMENT
ADVERTISEMENT