உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு

30th Dec 2020 01:04 PM

ADVERTISEMENT

 

ஜப்பானின் இபராகி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 

வடக்கு இபராகியில் 60 கி.மீ (37 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

டோக்காய் -2, புகுஷிமா -1 மற்றும் புகுஷிமா -2 அணு மின் நிலையங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அசாதாரண சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று என்.எச்.பி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT