உலகம்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்

30th Dec 2020 09:59 AM

ADVERTISEMENT



வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கரோனா நோய்த்தொற்றுக்கான முதல்கட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸுக்கு வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் செவ்வாய்க்கிழமை மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  அவரது கணவரும் மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது: செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த்தொற்றுக்கான முதல்கட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இந்த தருணத்தை சாத்தியமாக்கிய தேசத்தின் முன்னணி சுகாதார ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக உள்ளேன்.

"நீங்கள் தடுப்பூசி எடுக்க முடிந்தால், அதனை எடுத்துக்கொள்ளுங்கள். இது உயிர்களைக் காப்பதாகும். பாதுகாப்பானது."

ADVERTISEMENT

தனது கணவர் மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டதை ஹாரிஸ் உறுதிப்படுத்தினார்.

ஹாரிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டது, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜோ பைடன் ஒரு வாரத்திற்கு முன்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT