உலகம்

குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி 

30th Dec 2020 09:40 AM

ADVERTISEMENT

 

குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.

குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பாதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கே 50 கி.மீ தொலைவில் உள்ள பெட்ரிஞ்சா என்ற சிறிய நகரத்தில் இந்த பூகம்பம் மதியம் 12.19 மணியளவில்ல் தாக்கியதாக . செவ்வாயன்று, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT