உலகம்

மேற்கு கேமரூனில் பேருந்து விபத்து: 37 பேர் பலி

27th Dec 2020 09:49 PM

ADVERTISEMENT

மேற்கு கேமரூனில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பேர் பலியானார்கள். 
கேமரூனில், மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. நிமேல் எனும் கிராமம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. 
இந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள். 18க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து அப்பகுதியினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
விபத்துக்குள்ளான பேருந்தில் 60 பேர் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழா முடித்துக்கொண்டு பேருந்தில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT