உலகம்

போலந்தில் 24 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

18th Dec 2020 05:00 PM

ADVERTISEMENT

போலந்தில் கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று, உலக நாடுகள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 
இதையடுத்து அங்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் தொடங்கியது. உலகளவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் 75,395,022 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 
அவா்களில் 1,670,836 போ் அந்த நோய் பாதிப்பால் பலியாகியுள்ளனா். 52,949,288 போ் பூரண குணமடைந்துள்ளனா். இந்த நிலையில் போலந்தில் கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கு, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11,953 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு 11,71,854ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கரோனாவுக்கு மேலும் 431 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 24,345ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronaviurs
ADVERTISEMENT
ADVERTISEMENT