உலகம்

கூகுள் செயலிகள் மீண்டும் செயல்படத் துவங்கின

14th Dec 2020 06:19 PM

ADVERTISEMENT

கூகுள் நிறுவனத்தின் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கின. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் செயலிகள் திங்கள்கிழமை மாலை உலகம் முழுவதும் முடங்கின. சுமார் 15 நிமிடங்களாக கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே, கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கின. இதனால் உலகம் முழுவதுமுள்ள கூகுள் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

ஜிமெயில், யுடியூப் உள்ளிட்ட கூகுள் செயலிகள் முடங்கின

ADVERTISEMENT

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது. அதேபோன்று கோளாறு சரி செய்யப்பட்டு பிரச்னை குறித்து தெரிவிக்கப்படும் என யுடியூப் நிறுவனம் தெரிவித்தது. 

 

இந்நிலையில், கூகுள் சேவைகள் முடங்கிய சில நிமிடங்களிலேயே செயலிகள் படிப்படியாகத் செயல்படத் தொடங்கி தற்போது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளன. 

Tags : google
ADVERTISEMENT
ADVERTISEMENT