உலகம்

2,900 கிலோ பொருள்களுடன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம்

7th Dec 2020 03:44 PM

ADVERTISEMENT

'ஸ்பேஸ்எக்ஸ்'-இன் 'டிராகன்' விண்கலம் 2,900 கிலோ எடையுள்ள பொருள்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்றுள்ளது. 

அமெரிக்க தனியார் நிறுவனமான 'ஸ்பேஸ்எக்ஸ்' தயாரித்துள்ள 'டிராகன்' விண்கலம் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த மாதம் டிராகன் மூலமாக 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 

இதன் தொடர்ச்சியாக  ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றொரு டிராகன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள், ஒரு பயோ மைனிங் ஆய்வுக்காக நொறுக்கப்பட்ட சிறுகோள் மாதிரிகள், விண்வெளியில் வீரர்களுக்கு விரைவான ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்கும் புதிய மருத்துவக் கருவி உள்ளிட்டவை அடங்கிய  2,900 எடையுள்ள பொருள்களை டிராகன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வறுத்த வான்கோழி, ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களுடன் பரிசுப்பொருள்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

தற்போது முதல்முறையாக விண்வெளி சுற்றுப்பாதையில் இரண்டு டிராகன் விண்கலங்கள் செயலில் உள்ளன. 

2012 ஆம்  ஆண்டு இப்பணியைத் தொடங்கிய ஸ்பேஸ்எக்ஸ் தற்போது 21 ஆவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஸ்பேஸ்எக்ஸின் 68 ஆவது வெற்றிகரமான பூஸ்டர் தரையிறக்கம் ஆகும்.

Tags : Spacex
ADVERTISEMENT
ADVERTISEMENT