உலகம்

ரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: புதிதாக 28,142 பேருக்குத் தொற்று

7th Dec 2020 03:56 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,142 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 456 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்தும் பலி 500 ஐக் கடந்தும் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 28,142 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 24,88,912 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 7,279 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 456 பேர் உள்பட இதுவரை 43,597 பேர்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 19,56,588 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,88,727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT