உலகம்

லண்டன் வந்தடைந்தது முதல் கரோனா தடுப்பூசி

7th Dec 2020 02:51 PM

ADVERTISEMENT

பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசிகள் முதல்முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்துள்ளன. அவசரகால பயன்பாட்டிற்காக பிரிட்டன் அரசு 8 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. 

இந்த தடுப்பூசியை பராமரிப்பது சற்று சிக்கலானதுதான். இதனை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்) என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும். 

சாதாரண குளிர்சாதனப்பெட்டியில் அதாவது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சில நாள்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்பின்னர் மைனஸ் 70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்திருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதேபோன்று தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே குளிர்நிலையிலிருந்து அறை வெப்பநிலைக்கு மாற்ற வேண்டும். 

ADVERTISEMENT

பிரிட்டனில் முதல்கட்டமாக உள்ளூர் மருத்துவர்களின் அலுவலகங்கள், உள்ளூர் சுகாதார மையங்களில் டிசம்பர் 14 முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 95% செயல்திறனைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT