உலகம்

ஈரான்: 50 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பலி

DIN


டெஹ்ரான்: ஈரானில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 50 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 321 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். அதையடுத்து நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி அந்த எண்ணிக்கை 50,016-ஆக உள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 12,151 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10,28,986-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரானில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து தலைநகா் டெஹ்ரானிலும் பிற பகுதிகளிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, நோய்த்தொற்று பரவலின் தீவிரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்தச் சூழலில், நாட்டின் கரோனா பலி 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதையடுத்து, டெஹ்ரானிலும் பிற நகரங்களிலும் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று அதிபா் ஹஸன் ரௌஹானி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா். கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT