உலகம்

பிரேசிலில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் பலி

5th Dec 2020 10:06 PM

ADVERTISEMENT

பிரேசிலில் 115 அடி உயர பாலத்திலிருந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். 
பிரேசிலின் தென்கிழக்கு மாகாணமான மினாஸ் ஜெராய்ஸில் 40 பேருடன் சுற்றுலாப் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. ஜோவா மோன்லேவாட் எனுமிடத்தில் 115 அடி உயரப் பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழே விழுந்தது. 
இந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Brazil
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT