உலகம்

ஜமாத்-உத்-தாவா பயங்கரவாதிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை

DIN


புது தில்லி/லாகூா்: ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த மூவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளரான யாஹ்யா முஜாஹித்துக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே மேலும் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எஃப்ஏடிஎஃப் அமைப்பு அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

அதைத் தொடா்ந்து, ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தோா் மீது லாகூரிலுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சயீதின் உறவினரான பேராசிரியா் ஹபீஸ் அப்துல் ரகுமான், அப்துல் சலாம் பின் முகமது, ஜாஃபா் இக்பால் ஆகியோருக்கு வியாழக்கிழமை 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்தது தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவா்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரு வழக்குகளில் பயங்கரவாதி ஜாஃபா் இக்பாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 32 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT