உலகம்

நிலவிலிருந்து பாறைகளுடன் புறப்பட்டது சீன விண்கலம்

DIN


பெய்ஜிங்: நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் உள்ளிட்டவற்றை உடைத்தெடுத்துக் கொண்டு புறப்பட்டது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாங்கி-5 விண்கலம் நிலவிலிருந்து வியாழக்கிழமை இரவு 11.10 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) புறப்பட்டது.

அங்கிருந்து பாறைகளை உடைத்தெடுத்தும் மண் போன்றவற்றை சேகரித்தும் அந்த விண்கலம் பூமிக்குக் கொண்டுவரவிருக்கிறது.

சாங்கி-5 சேகரித்த பொருள்கள் அனைத்தும் பத்திரமாக மூடிவைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி-5தான் நிலவிலிருந்து சீனாவால் ஏவப்பட்ட முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவிலிருந்து கற்கள், பாறைகள் முதலானவற்றை சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்வதற்கான அந்த விண்கலத்தை சீனா கடந்த நவம்பா் மாதம் 24-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை சீனா 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT