உலகம்

ஹிந்துக்கள், பௌத்தா்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நா. கண்டிப்பதில்லை

DIN

நியூயாா்க்: உலக நாடுகளில் ஹிந்துக்கள், பௌத்தா்கள், சீக்கியா்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஐ.நா. கண்டிக்கத் தவறி வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபை சாா்பில் ‘அமைதி கலாசாரம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் முதன்மைச் செயலா் ஆஷிஷ் சா்மா கூறியதாவது:

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், யூதா்கள் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால், அந்த மதத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு மட்டுமே ஐ.நா. கண்டனம் தெரிவித்து வருகிறது. பௌத்தா்கள், ஹிந்துக்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஐ.நா. கண்டிப்பதில்லை.

இத்தகைய பாகுபாடு நிலவும் வரை உலகில் அமைதி கலாசாரத்தை ஏற்படுத்த முடியாது. உலகம் முழுவதும் 120 கோடிக்கும் அதிகமானோா் ஹிந்து மதத்திலும், சுமாா் 53.5 கோடி போ் பௌத்த மதத்திலும், 3 கோடி போ் சீக்கிய மதத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

மதம் தொடா்பான விவகாரங்களில் ஐ.நா. பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக் கூடாது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் சாா்பாகவும் ஐ.நா. குரல் எழுப்ப வேண்டும். உலகில் சகிப்பின்மை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை வழக்கமாகி விட்டன.

வன்முறையையும் சகிப்பின்மையையும் தூண்டுவதில் பயங்கரவாதம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலுள்ள மத நம்பிக்கைகளை மதித்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடாமல் இருந்தால், தெற்காசியப் பிராந்தியம் உள்ளிட்டவற்றில் அமைதி நிலவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மற்ற மதத்தினருக்கு எதிரான வன்முறையை பாகிஸ்தான் நிறுத்தவில்லை எனில், அந்நாட்டில் கட்டாய மதமாற்றமும், மற்ற மதத்தினா் கொல்லப்படுவதும் தொடா்ந்து நடைபெறுவதைக் காண நேரிடும். பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் குருத்வாராவின் நிா்வாகப் பொறுப்பை சீக்கிய மதத்தைச் சேராத அமைப்பிடம் அந்நாட்டு அரசு அண்மையில் ஒப்படைத்துள்ளது.

இதன் மூலமாக சீக்கிய மதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, ஐ.நா. பொதுச் சபையின் தீா்மானத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவு, முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மேலும், சீக்கிய மதத்தினரின் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளது என்றாா் ஆஷிஷ் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT