உலகம்

"டைம்' இதழின் ஆண்டின் சிறந்த நபர்: இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு

DIN

நியூயார்க்: இந்த ஆண்டின் சிறந்த நபராக, கீதாஞ்சலி ராவ்(15) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. அந்த இதழ், ஒரு சிறுமியை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஒருவரைத் தேர்வு செய்து டைம் இதழ் கெüரவிப்பது வழக்கம். அந்த வரிசையில், இந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கொலராடா மாகாணத்தில் உள்ள லோன்டிரீ நகரத்தில் வசித்து வருகிறார்.

இந்த ஆண்டுக்கான போட்டிக் களத்தில் 8 முதல் 16 வயதுக்கு உள்பட்ட  5,000-க்கும் மேற்பட்ட சிறார்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இறுதியில் கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டார். மாசுபட்ட குடிநீரை தூய்மையாக்குவது, போதைப்பொருட்களுக்கு அடிமை, இணையவழி தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். இவரது திறமைகளை மதிப்பிட்டு, டைம் இதழ், "ஆண்டின் சிறந்த சிறுமி'-ஆக தேர்வு செய்துள்ளது. மேலும், டைம் இதழின் சிறப்பு பதிப்புக்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு காணொலி வழியாக கீதாஞ்சலி ராவ் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து டைம் இதழ் வெளியிட்ட செய்தியில், "இந்த உலகத்தை வடிவமைப்பவர்களுக்கே, அது சொந்தமானதாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய தலைமுறையும் இந்தக் குழந்தைகளைப் போன்ற சாதனையாளர்களை உலகுக்கு அளிக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT