உலகம்

ரஷியாவில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா தொற்று

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 569 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்தும் பலி 500 ஐக் கடந்தும் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 27,403 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 24,02,949 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,868 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 569 பேர் உள்பட மொத்த பலி எண்ணிக்கை 42,176 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 18,88,752 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 472,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT