உலகம்

27 ஆண்டுகளுக்கு முன்பு சேமித்த கருவிலிருந்து குழந்தை; மகளை விட ஒரு வயது மூத்த தாய்

DIN


27 ஆண்டுகளுக்கு முன்பு சேமித்த கருவைப் பயன்படுத்தி பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மோல்லி கிப்சன் பிறந்துள்ளார். குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மோல்லியின் கருமுட்டை கடந்த 1992-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதப்படுத்தப்பட்டுள்ளது. அது 2020 பிப்ரவரி மாதம் வரை சேமித்து வைக்கப்பட்டிருந்தது.  அந்த கரு முட்டையை டென்னெஸ்ஸியைச் சேர்ந்த டினா - பென் கிப்சன் தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.

நாங்கள் நிலவில் இருப்பதை போல உணர்கிறோம், நான் இன்னமும் ஆச்சரியத்தில் உறைந்துபோயுள்ளேன் என்கிறார் டினா.

டினா, ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியை. அவரது 36 வயது கணவர் கணினி இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு நிபுணர். இவர் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் லாபநோக்கமற்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு, கருவை சேமித்து வைத்து, அதனை பயன்படுத்தாமல், தானமளிக்க விரும்புவோர் பற்றி கேட்டறிந்தார்.

அப்போது, பயன்படுத்தாமல் இருந்த ஒரு கரு முட்டையை எங்களுக்கு தானமளித்து, குழந்தைப் பேறு கிடைக்க அந்த அமைப்பு உதவியது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் மட்டும் தற்போது சுமார் 10 லட்சம் கருமுட்டைகள் பதப்படுத்தப்பட்டுள்ளன என்கிறது புள்ளி விவரங்கள்.

குழந்தையில்லாமல் வாடி வந்த கிப்சன் தம்பதி, 2017-ஆம் அண்டு தானமாகப் பெற்ற கருவைக் கொண்டு எம்மா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 27 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருவைக் கொண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து தங்களது குடும்பத்தை பெரிதாக்கியுள்ளனர்.

கிப்சனின் குழந்தைகள் மோல்லி, எம்மா ஆகியோர் சகோதரிகள். இரண்டு கருக்களுமே 1992-ஆம் ஆண்டு ஒன்றாகவே தானமளிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது.  அப்போது குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கும் டினாவுக்கு ஒரு வயதிருக்கும். 

எம்மாவை நாங்கள் பெற்றெடுக்கும் போது, 24 ஆண்டு கருவை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுத்தது சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்லியை பெற்றெடுத்து, அதுவும் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட கருவைக் கொண்டு முதல் குழந்தை ஆஸ்திரேலியாவில் 1984-ஆம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT