உலகம்

துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

ANI

தென்கிழக்கு துருக்கியின் சிர்த் மாகாணத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் காலை 8:45 மணிக்கு தாக்கியதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

20 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தாண்டு மட்டும் இரண்டு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்று
கடந்த அக்டோபர் மாதம் மேற்கு துறைமுக நகரமான இஸ்மிரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 117 பேர் பலியாகினர். மற்றொன்று எலாஜிக் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 1999ல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 17,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT