உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 6.48 கோடியைக் கடந்தது

DIN

வாஷிங்டன்: உலகில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6,48,44,711 கோடியைக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 14,99,346 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 48 லட்சத்து  44ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,48,44,711 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,99,346 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 44,941,481போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,84,03,884 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,672 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை  1,43,13,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 279,865 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 84,62,347பேர் குணமடைந்துள்ளனர், 55,71,729 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 26,187 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

இந்தியா 94,99,413 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,38,122 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,062 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

SCROLL FOR NEXT