உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கரோனா சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

1st Dec 2020 05:20 PM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டிரம்பின் கரோனா தடுப்பு சிறப்பு ஆலோசகரான டாக்டர் ஸ்காட் அட்லஸ் தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் பரவிய கரோனா தொற்று குறித்த அதிபரின் சிறப்பு ஆலோசகராக டாக்டர் ஸ்காட் அட்லஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியமர்த்தப்பட்டார். கடந்த 130 நாள்களாக பணியாற்றி வந்த அவரின் பணிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில்  அதற்கு முன்பாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் டிரம்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் அமெரிக்க மக்களுக்காக பணியாற்ற பணியமர்த்தப்பட்டதற்கு டிரம்பிற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : USA
ADVERTISEMENT
ADVERTISEMENT