உலகம்

‘கரோனா வைரஸ் தோன்றியதை அரசியலாக்க வேண்டாம்’: உலக சுகாதார நிறுவனம்

1st Dec 2020 02:20 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தோன்றியதை அறிவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், “கரோனா தோற்றம் குறித்து அறிந்துகொள்ள அனைத்தையும் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும்,“சிலர் இதை அரசியல்மயமாக்கி வருகின்றனர். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது. நாங்கள் வூஹானிலிருந்து ஆய்வைத் தொடங்குவோம். இந்த வைரஸின் தோற்றத்தை நாங்கள் அறிந்து கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தயவுசெய்து இதை அரசியல்மயமாக்க வேண்டாம். அறிவியலை அடிப்படையாகக் கொண்டு எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். மேலும், விஞ்ஞான ரீதியாக எங்கள் ஆய்வுகளை திசைதிருப்ப அரசியல்மயமாக்கல் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : WHO
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT