உலகம்

பாகிஸ்தான்:கரோனா பாதிப்பு 2,95,372-ஆக உயா்வு

30th Aug 2020 01:19 AM

ADVERTISEMENT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,95,372-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில்319 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,95,372-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் ஒருவா் பலியானாா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,284-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,80,340 போ் குணமடைந்துள்ளனா். 8,748 போ் தொடா்ந்து சிகிச்சி பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 642ே பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT