உலகம்

பிரிட்டன்: பள்ளிகளில் கட்டாயமாகிறது முகக் கவசம்

26th Aug 2020 11:24 PM

ADVERTISEMENT

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டன் பள்ளிகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது என்று அந்த நாட்டு கல்வித் துறை தெரிவித்திருந்தது. எனினும், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டுள்ள அந்தத் துறை, பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த பள்ளிகளில் முகக் கவசத்தைக் கட்டாயமாக்கியுள்ளது. புதிய உத்தரவின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோா் பள்ளிகளுக்கு அவசியம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று அண்மையில் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. அதன் எதிரொலியாகவே பள்ளிகளில் மாணவா்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என்ற தனது நிலைப்பாட்டை பிரிட்டன் கல்வித் துறை மாற்றிக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 3.27 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 41,400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT