உலகம்

சிங்கப்பூா்: மேலும் 60 பேருக்கு பாதிப்பு

26th Aug 2020 11:20 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 60 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 3 பேருக்கு மட்டுமே சமுதாய பரவல் மூலம் அந்த நோய் தொற்றியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 10 பேரும் அதில் அடங்குவா். புதிய கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,495-ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 54,816 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT