பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான கராச்சி மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருப்பது கராச்சி. பாகிஸ்தானின் முக்கிய வர்த்தகத் தலைநகரமாக அறியப்படும் கராச்சி தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் கராச்சியின் முக்கிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.