உலகம்

சீனத் தானிய விளைச்சல் அறுவடை செய்யும் வாய்ப்பு அதிகம்

26th Aug 2020 06:28 PM

ADVERTISEMENT

 

வெள்ளப்பெருக்கு, புதிய ரக கரோனா வைரஸ், சீன-அமெரிக்க வரத்தகச் சர்ச்சை முதலிய காரணங்களினால், சீனாவின் தானிய பாதுகாப்புப் பிரச்சினைக்கான வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் அதிகரித்து வருகின்றது.

அதோடு, சீனா முழுவதிலும் தானியத்தை வீணாக்குவதை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா என்ற சந்தேகம் வெளியுலகில் அதிகரித்துள்ளது.

இயற்கை சீற்றம், தொற்று நோய் போன்றவற்றுடன், தானியத்தைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கையை சேர்த்து, சீனாவில் தானிய பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட இருப்பதாக கூறுவது, உண்மைக்கு புறம்பானதாகும்.

ADVERTISEMENT

சீனச் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த கிராமப்புற வளர்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர் ஹு பிங் ட்சுவன்(Hu Bingchuan)கூறுகையில், இவ்வாண்டில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களினால், முற்றிலும் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத பயிர்களின் நிலப்பரப்பு, தானியம் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பிலும், 1விழுக்காட்டுக்குக் குறைவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உண்மையில், இவ்வாண்டில் புதிய ரக கரோனா வைரஸ், வெள்ளப்பேருக்கு முதலியவை பாதிக்கப்பட்ட நிலைமையில், சீனாவின் கோடைக்கால தானிய விளைச்சல் இன்னும் அதிகரித்துள்ளது. சீனத் தேசிய புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டு சீனாவில் மொத்த கோடைக்கால தானிய விளைச்சல் 14கோடியே 28இலட்சத்து10ஆயிரம் டன் ஆகும். 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.9விழுக்காடு அதிகமாகும். முப்போக நெல்களின் மொத்த விளைச்சல் 2கோடியே 72இலட்சத்து 90ஆயிரம் டன் ஆகும். முப்போக நெல்களின் விளைச்சல் தொடர்ந்து 7ஆண்டுகளாக குறைந்த போக்கை இது மாற்றியுள்ளது. 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 3.9விழுக்காடு அதிகமாகும். 

ஆகஸ்ட் 20-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வேளாண் மற்றும் கிராகப்புற அமைச்சகத்தின் துணை அமைச்சர் யூ காங் சென்(Yu Kangzhen) கூறுகையில், சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் சீனா பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டின் பிற்பாதியில் கடும் சீற்றம் ஏற்படாமல் இருந்தால், மேலும் கூடுதல் தானிய விளைச்சல் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT