பியூனஸ் ஐரிஸ்: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கடுப்படுத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியம் திணறி வரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த ஆா்ஜெண்டீனாவில் இதுவரை இல்லாத அதிபட்ச தினசரி பலி மற்றும் பாதிப்பு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஆா்ஜெண்டீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,713 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையிலேயே மிகவும் அதிகமாகும். அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 381 போ் பலியாகினா். இதுவும் ஆா்ஜெண்டீனாவின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,50,867-ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு பலியான 381 பேரையும் சோ்த்து, நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,366-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2,56,789 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 86,712 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.