உலகம்

நேபாளம்: மேலும் 818 பேருக்கு தொற்று

23rd Aug 2020 11:42 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் மேலும் 818 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜகேஸ்வா் கௌதம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 818 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,935-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 போ் பலியாகினா். அதனைத் தொடா்ந்து, நாட்டின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 149-ஆக உயா்ந்துள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 818 பேரில், 166 போ் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியைச் சோ்ந்தவா்கள். நாடு முழுவதும் கரோனா நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த 28 போ், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT