உலகம்

அமெரிக்கா தனக்குத் தானே தேடிக் கொண்ட மோசமான முடிவு

21st Aug 2020 06:42 PM

ADVERTISEMENT


அமெரிக்க அரசு அண்மைக்காலமாக சீனாவின் உயர் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஒடுக்க முயன்று வருகின்றது. இந்த நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா எவ்வளவு தான் நியாயம் கற்பித்தாலும் அவை அடிப்படையில் அடக்குமுறைகளாகவே உள்ளன. அமெரிக்காவின் இந்நடவடிக்கைகள் அந்நாட்டிற்கே பெரும் பாதிப்பாக முடியும். இது, அமெரிக்கா தானாகத் தேடிக் கொண்ட மோசமான முடிவுமாகும்.

அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் ஆக்ஸ்ட் 6ஆம் நாள் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அதில், சீனாவின் டிக் டாக் செயலியானது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், இதனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குப் பின் அமெரிக்காவின் தனிநபர்களோ தொழில் நிறுவனங்களோ டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்யவோ பரிவர்த்தனை மேற்கொள்ளவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் நாள் அமெரிக்கா வெளியிட்ட மற்றொரு கட்டளையில், டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் 90 நாட்களுக்குள்ளாக அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீது கொண்டிருக்கும் அனைத்து நிர்வாக உரிமைகளையும் கை விட வேண்டும என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதை பேச்சுவார்த்தை முன்னேற்றத்தின் அடிப்படையில் பார்த்தால் பைட்டான்ஸ் நிறுவனம் பரிவர்த்தனையை முடிவுக்குக் கொண்டு வந்து 90 நாட்களுக்குள்ளாக அமெரிக்க பயன்பாட்டாளர்களின் அனைத்துத் தரவுகளையும் அழிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்க அரசானது சீனத் தொழில் நிறுவனங்களைக் கொடுமைப்படுத்துவதற்கான சான்று இதுவாகும்.

ADVERTISEMENT

உண்மையில், டிக் டாக் செயலியானது அமெரிக்க சட்டதிட்டங்களுக்குப் பொருந்திய நிலையிலேயே அந்நாட்டில் தன் பணியைத் தொடங்கியது. அதோடு அச்செயலியின் சேவையகமானது அமெரிக்காவிலும் தரவு மையங்களானவை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை 1500க்கு மேலான அமெரிக்க பணியாளர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கியுள்ள பைட்டான்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் 10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த நேரத்தில் இரு நாட்டுறவில் நெருக்கடியை ஏற்படுத்த சீனா விரும்பவில்லை. அதேவேளை, அமெரிக்கா எவ்வித காரணமுமின்றி சீன நிறுவனங்களைக் கொடுமைபடுத்தியது. அதற்குரிய பதில் நடவடிக்கைகளைச் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT